/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு
/
முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு
ADDED : ஆக 15, 2024 01:22 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில் நடப்பாண்டிற்கான முதுநிலை எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், எம்.எஸ்.சி., கணிதவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆகிய பாடப்பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வு வரும், 19 முதல், 23ம் தேதி வரை நடக்கிறது.
சேர்க்கையின் போது விண்ணப்ப படிவம் அசல், மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2, இளங்கலை ஆகியவற்றின் மதிப்பெண் பட்டியல்கள், தற்காலிக பட்டச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அட்டையின் அசல் மற்றும் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கொண்டு வர வேண்டும். மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும். சேர்க்கை பெற்ற மாணவர்கள், கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என, கல்லுாரி முதல்வர் ரவி தெரிவித்துள்ளார்.