ADDED : மே 10, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி;பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டியில் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி, மண் மாதிரிகள் சேகரித்தல் குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் அருணன் தலைமை வகித்தார்.பயிற்சியில், விவசாயிகள் மண் பரிசோதனை செய்வதன் அவசியம், முக்கியத்துவம், மண் பரிசோதனைக்கு மண் மாதிரிகள் எடுத்தல், மண் வளத்தை மேம்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வேளாண் அலுவலர் ஜீவகலா, உதவி வேளாண் அலுவலர் சுரேஷ், வட்டார அட்மா திட்ட தலைவர் சண்முகம், வட்டார தொழில்நுட்ப மேலாளர், சரவணன், திருப்பதி, செல்வம், காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.