sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

/

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 11, 2024 06:22 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி, நல்லம்பள்ளி தாசில்தார் அலுவ-லகம் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், நல்லம்பள்ளி வட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சிவசுப்ரமணி, மாவட்ட அமைப்பு செயலாளர் முனுசாமி, வட்ட பொருளாளர் சண்முகம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். இதில், மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியை, வி.ஏ.ஓ.,க்கள் மீது, அரசு சுமத்துவதை தவிர்த்து, வேளாண் துறை-யினரிடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணியை வருவாய்த்துறை-யினர்

மேற்கொள்ள வேண்டும் என்றால், கூடுதல் பணியாளர்-களை அரசு நியமிக்க நடவடிக்கை வேண்டும் என்பதை வலியு-றுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட பிரசார செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.* அரூர் தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில், நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், டிஜிட்டல் பயிர்

கணக்கீடு பணிக்கு, பிற மாநிலங்களை போல் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் அரசுடன் நடைபெற்ற பேச்சு-வார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடுகளை அமல்படுத்த வேண்டும். டிஜிட்டல் பயிர்

கணக்கீடு பணிக்கு உரிய தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us