/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அடிப்படை வசதிகள் கேட்டு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
அடிப்படை வசதிகள் கேட்டு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 24, 2024 01:29 AM
தர்மபுரி, ஆக. 24-
தடங்கம் பஞ்.,க்கு உட்பட்ட கிராமங்களில், அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் பஞ்.,க்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர், சிமென்ட் சாலை, தெரு விளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இதை கண்டித்து, தர்மபுரி, மா.கம்யூ., கட்சி சார்பில், ஒன்றியக்குழு உறுப்பினர் முனியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தடங்கம் பஞ்.,க்கு உட்பட்ட சவுளுப்பட்டி சித்தேஸ்வரா நகரில் உள்ள மண் சாலையை சிமென்ட் சாலையாக மாற்ற வேண்டும். சவுளுப்பட்டியில் முறையாக ஒகேனக்கல் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இரண்டு ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் உள்ள, அங்கன்வாடி மையத்தை உடனடியாக கட்ட வேண்டும். நேரு நகர் மற்றும் அரசு கலைக்கல்லுாரி அருகே உள்ள குப்பையை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தடங்கம் பஞ்.,ல் கால்நடை மருத்துவமணை அமைக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்காதபடி சிப்காட் பணிகளை துவக்க வேண்டும், தடங்கத்தில், சேதமான நிலையில் உள்ள மயான பாதையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

