sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மாற்றம் 'தடங்கம்' போனார்...; தர்ம செல்வன் வந்தார்...

/

தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மாற்றம் 'தடங்கம்' போனார்...; தர்ம செல்வன் வந்தார்...

தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மாற்றம் 'தடங்கம்' போனார்...; தர்ம செல்வன் வந்தார்...

தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மாற்றம் 'தடங்கம்' போனார்...; தர்ம செல்வன் வந்தார்...


ADDED : பிப் 24, 2025 03:43 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளரான தடங்கம் சுப்பிரமணியை நீக்கிவிட்டு, புதிய பொறுப்பாளராக பென்னாகரத்தை சேர்ந்த தர்மசெல்வனை நியமித்து, பொது செய-லாளர் துரைமுருகன் நேற்று அறிவித்தார்.

தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வில் ஒருங்கிணைந்த மாவட்ட செய-லாளராக தடங்கம் சுப்பிரமணி, 2013ல் நியமிக்கப்பட்டார். கடந்-தாண்டு கிழக்கு, மேற்கு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்-டன. இதில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மாவட்ட செயலாளராக பழ-னியப்பன் நியமிக்கப்பட்டார்.தர்மபுரி, பென்னாகரம் தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்ட செயலாளராக தடங்கம் சுப்பிரமணி இருந்தார். கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அலை வீசியபோதும் தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், தி.மு.க.,வில் இருந்து விலகிய பின், தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க.,வை முன்னெ-டுத்து சென்று சிறப்பாக செயல்பட்டார்.

இந்த நிலையில் கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் மணி, பா.ம.க.,வின் சவுமியாவை விட, 21,300 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதில் சுப்பிரமணி பொறுப்பு வகிக்கும் தர்மபுரி, பென்னாகரம் தொகுதிகளில் பா.ம.க., அதிக ஓட்டுகளை பெற்றது. அரூர், பாலக்கோடு தொகுதியில் பெற்ற ஓட்டுகளே தி.மு.க., வெற்றிக்கு கைகொடுத்தது. பா.ம.க.,வின் வளர்ச்சி அதிகரிப்பு தி.மு.க., கட்சி தலைமையை கவனிக்க வைத்தது. ஆனாலும், அமைச்சர்கள் நேரு மற்றும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்ததால், தடங்கம் சுப்பிரமணி பதவிக்கு உடனடியாக தடங்கல் வரவில்லை.

இளைஞரணி, மாணவரணியை அரவணைக்காமல், 60 வய-துக்கு மேற்பட்ட நிர்வாகிகளை மட்டும் அருகில் வைத்து கொண்டு செயல்பட்டார். தடங்கம் சுப்பிரமணி தலைமையில் ஒரு அணி, முன்னாள் எம்.பி., செந்தில்குமார் தலைமையில் ஒரு அணி, பென்னாகரம் முன்னாள் எம்.எல்.ஏ., இன்பசேகரன் தலை-மையில் ஒரு அணி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன் தலைமையில் ஒரு அணி என, கிழக்கு மாவட்-டத்தில் நான்கு அணிகள் உதயமாகின.

இதில் மற்ற மூன்று அணிகளும் தடங்கத்துக்கு எதிராக கை கோர்த்தன. மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி இல்லாமல் போனதற்கு தடங்கம் சுப்பிரமணியும், அவருடன் திரியும் சிலர்தான் காரணம் என, தலைமைக்கு தொடர்ந்து புகாரளித்து வந்தனர்.

இந்நிலையில் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளராக இருந்த தர்மசெல்வனை, தர்மபுரி மற்றும் பென்னாகரம் தொகுதியை உள்ளடக்கிய, கிழக்கு மாவட்ட செயலாளராக நேற்று நியமித்து, கட்சி பொது செயலாளர் துரைமுருகன் அறி-வித்தார். கட்சியின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சியை கருத்தில்-கொண்டு, தர்மசெல்வனுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வினர் தெரி-வித்தனர்.






      Dinamalar
      Follow us