/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர் சாதனை

ADDED : மே 11, 2024 11:35 AM
தர்மபுரி: தர்மபுரி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 2023-24 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி கவுசிகா, - 496, லக்ஷ்மி பிரபா,- 496, நேத்ரா,- 494, பொய்யாமொழியாழ்,- 494, நிருபா அக்சயா,- 494, யாசினி - 493, மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதில் 12 மாணவர்கள், 490-க்கு மேலும், 40 மாணவர்கள் 480-க்கு மேலும், 60 மாணவர்கள், 470-க்கு மேலும், 94 மாணவர்கள், 450-க்கு மேலும், 178 மாணவர்கள், 400-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதில், பாடவாரியாக முழு மதிப்பெண்கள் (100/100) கணிதம், -13 மாணவர்கள், அறிவியல் -9 மாணவர்கள், சமூக அறிவியல், -10 மாணவர்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளையும், செந்தில் குழுமத் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செந்தில் கல்வி குழுமங்களின் செயலாளர் தனசேகர், முதல்வர் வள்ளியம்மாள், நிர்வாக முதல்வர் (நிர்வாகம்) ரபிக் அஹமத், துணை முதல்வர் கவிதா, மேல்நிலைப்பிரிவு பொறுப்பாசிரியர் திருநாவுக்கரசன், இடைநிலைப்பிரிவு பொறுப்பாசிரியர் நஜ்மா பேகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.