/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாநில தடகள போட்டிக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள்
/
மாநில தடகள போட்டிக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள்
ADDED : ஆக 25, 2024 01:28 AM
மாநில தடகள போட்டிக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள்
தர்மபுரி, ஆக. 25-
தர்மபுரி மாவட்டத்தில், பெருமூளை முடக்குவாத மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், வீல்சேர் துரோவிங் உள்ளிட்ட போட்டிகளில் தேர்வு பெற்ற, 25 மாற்றுத்திறனாளிகள் ஆக.,- 25 இன்று சேலம், மகாத்மா காந்தி விளையாட்டரங்கில், மாநில தடகள போட்டியில் பங்கேற்கின்றனர். இதில், பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்ட செரிபிரல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், தர்மபுரியில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, தி.மு.க., தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவுதம், தர்மபுரி மாவட்ட செரிபிரல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் சாக்ரட்டீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

