/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
5 ரூபாய் நாணயம் விழுங்கிய சிறுவன் அறுவை சிகிச்சையின்றி அகற்றிய டாக்டர்கள்

ADDED : ஏப் 28, 2024 04:00 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி காமராஜர் நகரை சேர்ந்த சிவா-, விஜயபிரியா ஆகியோரது மகன் வினித், 10; இவர் வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது, கையில் வைத்திருந்த, 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி உள்ளார். இதை கண்ட உறவினர்கள், சிறுவனை ஊத்தங்கரை அரசு மருத்துவ
மனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவ அலுவலர் மதன்குமார், டாக்டர் சதீஷ், செந்தில் உள்ளிட்ட டாக்டர்கள், எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, தொண்டை பகுதியில், 5 ரூபாய் நாணயம் சிக்கியிருந்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து, அறுவை சிகிச்சையின்றி நாணயத்தை எடுக்க முயற்சித்து, குறித்த நேரத்தில் சிறுவன் விழுங்கிய நாணயத்தை அப்புறப்படுத்தினர். சிகிச்சை செய்த டாக்டர்கள் மதன்குமார், செந்தில், மயக்கவியல் நிபுணர் டாக்டர் சதீஷ்குமார் ஆகியோருக்கு, சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.