/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளி கல்வி இடைநிற்றல்: 4 சிறுவர் மீட்பு
/
பள்ளி கல்வி இடைநிற்றல்: 4 சிறுவர் மீட்பு
ADDED : செப் 03, 2024 05:23 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஒன் ஸ்டாப் கிரைசிஸ் டீம் சேவை துவங்கப்பட்டு, அதன் முதல் கலந்தாய்வு கூட்டம், தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஆக., 28 அன்று நடந்தது. இந்த அமைப்பின் உறுப்பினர்களான, டி.ஆர்.ஓ., தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை துணை இயக்குனர், தர்மபுரி தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், குழந்தை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர், மாவட்ட நீதிக் குழும வக்கீல்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் ஆலோ-சனை வழங்கினர்.
இதில், தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பள்ளி கல்வி இடைநிற்றலால் பாதித்த, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் 2 சிறுவர்கள் மற்றும் தனியார் தானியங்கி பணிம-னையில் குழந்தை தொழிலாளராக இருந்த, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை சேர்ந்த ஒரு சிறுவன் ஆகிய நால்வர் நேற்று மீட்கப்பட்டனர். அவர்கள், பள்ளி கல்வியை தொடர ஏது-வாக, தர்மபுரி குறிஞ்சி நகரிலுள்ள, வள்ளலார் சிறுவர் இல்-லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.