ADDED : ஆக 24, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
பாலக்கோடு, ஆக. 24-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட காரிமங்கலம், மகேந்திமங்கலம், பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களை உள்ளடக்கிய, பாலக்கோடு டி.எஸ்.பி., அலுவலகத்தில், டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய சிந்து, திருவள்ளுர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில், டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய மனோகரன், தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பாலக்கோடு டி.எஸ்.பி.,யாக மனோகரன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதில், குற்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும், அது குறித்து, தெரியவந்தால், பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்

