/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கூடுதல் ஓய்வூதியம் வழங்க மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பு வலியுறுத்தல்

ADDED : ஆக 11, 2024 03:21 AM
தர்மபுரி: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின், 24ம் ஆண்டு மாவட்ட பேரவை கூட்டம் தர்மபுரியில் நடந்தது.
மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இதில், தேர்தல் வாக்குறுதிபடி, 70 வயதானவர்களுக்கு கூடுதல் ஓய்வூ-தியம் வழங்க வேண்டும். மின்துறையை பொதுத்துறையாக பாது-காக்க வேண்டும். புதிய காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, பணப்பயன்களை வழங்க வேண்டும். நிறுத்தப்பட்-டுள்ள விதவை மகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூ-தியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவர் துரைசாமி, மண்டல செயலாளர் ரங்கன், மாவட்ட செயலாளர் விஜயன், பொருளாளர் சின்னசாமி, மண்டல செயலாளர் காளியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்ட நிறைவில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.