/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
/
தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
ADDED : மே 30, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் பகுதிகளில் பூக்களுக்கு அடுத்து அதிகளவு விவசாயிகள் தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, அவரை என காய்கறிகளை பயிரிடுகின்றனர்.
கடந்த சில நாட்களாக தொடர் மழையால் தக்காளி பயிர்கள் நாசமான நிலையில், கடத்துார், பொம்மிடி, புட்டிரெட்டிப்பட்டியில், 200 ரூபாய்க்கு விற்ற, 28 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி, படிப்படியாக விலை உயர்ந்து நேற்று முன்தினம், 1,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது விலை குறைந்து, ஒரு பாக்ஸ், 600 ரூபாய் என விற்கப்படுகிறது. தக்காளி விலை ஏறிய வேகத்தில் குறைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.