/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காட்டெருமைகளால் வயலில் பயிர்கள் நாசம்
/
காட்டெருமைகளால் வயலில் பயிர்கள் நாசம்
ADDED : செப் 05, 2024 03:28 AM
அரூர்: அரூர் அடுத்த கோட்டப்பட்டி, ஆவலுார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு, வாழை, மரவள்ளிக்
கிழங்கு, மக்காச்சோளம் பயிர்களை வனப்பகுதியில் இருந்து வரும் காட்டெருமைகள் மேய்வதுடன், அவற்றை நாசம் செய்து விட்டு செல்கின்றன.
இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படு-கிறது. மேலும், காட்டெருமைகளை விரட்டினால், அவை திருப்பி தாக்க வருவதால், விவசாயிகள் பீதியுடன் நடமாட வேண்டியுள்ளது. இதுகுறித்து, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்-வாகத்திற்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. சேதமான பயிர்களுக்கு வனத்துறை சார்பில், இழப்-பீடும் வழங்கப் படுவதில்லை. எனவே, பயிர்கள் நாசமாவதை தடுக்க, வனப்பகுதிகளில் கம்பி வேலிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.