/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓய்வூதிய வயதை 50 ஆக குறைக்க நாட்டுபுற கலைஞர்கள் கோரிக்கை
/
ஓய்வூதிய வயதை 50 ஆக குறைக்க நாட்டுபுற கலைஞர்கள் கோரிக்கை
ஓய்வூதிய வயதை 50 ஆக குறைக்க நாட்டுபுற கலைஞர்கள் கோரிக்கை
ஓய்வூதிய வயதை 50 ஆக குறைக்க நாட்டுபுற கலைஞர்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 04, 2024 04:51 AM
அரூர்: ஓய்வூதிய வயதை, 50 ஆக குறைக்க வேண்டும் என, தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஈட்டியம்பட்டியில், தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் சார்பில், ஈட்டி நாதம் கொட்டு முரசு வாத்திய இசைக் கலைஞர்கள் சங்க பெயர் பலகை மற்றும் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. சேகர் தலைமை வகித்தார். பெயர் பலகை மற்றும் அலுவலகத்தை, மாநில தலைவர் சத்யராஜ் திறந்து வைத்தார். இதில், நலிவுற்ற கலைஞர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், 3,000 ரூபாய் உரிய காலத்தில் வழங்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு அடையாள அட்டை விண்ணப்பித்து, 3 மாத காலத்துக்குள் வழங்க வேண்டும்.
மகளிர் கோலாட்டம், கும்மிப்பாட்டு கோலாட்டம் குழுவினருக்கு, தாமதமின்றி அடையாள அட்டையும், ஓய்வூதியத்தையும் வழங்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதிய வயதை ஆண்களுக்கு, 50- ஆகவும், பெண்களுக்கு, 40-ஆகவும் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கிருஷ்ணகிரி. தர்மபுரி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பத்துார், திருவண்ணாமலை உள்ளிட்ட, 15 மாவட்டங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர்.