/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
ADDED : ஆக 04, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தி.மு.க., - எம்.பி., மணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி, பா.ம.க., -
எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.