நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட தாட்கோ மற்றும் ராகவேந்திரா மருத்துவமனை இணைந்து, சுதந்திர தினவிழா இலவச மருத்துவ முகாமை நடத்தியது. மாவட்ட தாட்கோ அலுவலகத்தில், மேலாளர் எட்வர்டு ஸ்டீபன் தலைமையில் முகாம் நடந்தது.
இதில், அலுவலக மற்றும் துாய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என, 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். பொதுமக்கள் ரத்த அழுத்தம், ரத்த சோகை, சர்க்கரை, ரத்த வகை மற்றும் இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து கொண்டனர். சிறப்பு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார நல அலுவலர் டாக்டர் தாமரைகண்ணன், ஓய்வு பெற்ற சப் கலெக்டர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

