/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் அ.தி.மு.க., நீர்மோர் பந்தல் திறப்பு
/
தர்மபுரியில் அ.தி.மு.க., நீர்மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 26, 2024 03:42 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில், அ.தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. தர்பூசணி உள்ளிட்ட பழங்களும், 50 இளநீர், 500 லிட்டர் மோர் ஆகியவை வழங்கப்பட்டன. இதை, தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நகர செயலாளர் ரவி, பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல் மற்றும் பலர் பங்கேற்றனர். இதேபோல், நல்லம்பள்ளியில், தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
* அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், அ.தி.மு.க., சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர
செயலாளர் பாபு தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், வெள்ளரிபிஞ்சு, தர்பூசணி மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் அரூர் சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
அரூர் கொங்கு திருமணம் மண்டபம் அருகில், கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத் தலைவரும், ஊத்தங்கரை வித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான சந்திரசேகரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு சோளக்கூழ், மோர் ஆகியவற்றை வழங்கினார்.

