/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாப்பிரெட்டிப்பட்டியில் புதுமைப்பெண் திட்டம் துவக்கம்
/
பாப்பிரெட்டிப்பட்டியில் புதுமைப்பெண் திட்டம் துவக்கம்
பாப்பிரெட்டிப்பட்டியில் புதுமைப்பெண் திட்டம் துவக்கம்
பாப்பிரெட்டிப்பட்டியில் புதுமைப்பெண் திட்டம் துவக்கம்
ADDED : ஆக 11, 2024 03:25 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், புதுமைப்பெண் திட்டத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்-செல்வம் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில், ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில், தமிழ் வழியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாடப்புத்தகங்கள், பொது அறிவு நுால்கள், மற்றும் இதழ்களை வழங்கி அவர்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும், இத்திட்டத்தில், 7,033 பேர் பயன்பெறுகின்றனர். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.