/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காது கேளாத, வாய் பேச முடியாதவர்க்கு நிபந்தனையின்றி கடன் வழங்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 01, 2024 04:05 AM
தர்மபுரி: காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்களுக்கு, சுயதொழில் தொடங்க, நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும் என, தர்மபுரியில் நடந்த மாநிலக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் சங்க மாநிலக்குழு கூட்டம், தர்மபுரி செங்கொடி புரத்தில் நேற்று நடந்தது. இதில், மாநில தலைவர் ஜீவா தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் சொர்ணவேல், பொருளாளர் பவானி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க மாநில செயலாளர் வில்சன், அகில இந்திய பொருளாளர் சக்கரவரத்தி, மாவட்ட செயலாளர் மாரிமுத்து, உள்ளிட்டோர் பேசினர்.
இதில், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை ஆந்திரா, தெலுங்கானாவை போல தமிழ்நாட்டில் உயர்த்தி வழங்க வேண்டும். அவர்களுக்கு எவ்வித நிபந்தனையின்றி, தொழில் தொடங்க கடன் வழங்க வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், தமிழகத்திலுள்ள, முக்கிய அரசு அலுவலகங்களில் சைகை மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும்.
தனியார் துறையில் பணிபுரியும் மாற்றத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம், 15,000 வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.