/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி
ADDED : ஏப் 18, 2024 01:35 AM
தர்மபுரி, ஏப். 18-ன்னணு ஓட்டுபதிவு இயந்திரங்களை, ஓட்டுச்சாவடி
களுக்கு கொண்டு செல்லும், 147 வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான சாந்தி, மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் நேற்று ஆய்வு செய்தனர்.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சாந்தி கூறியதாவது:
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 1,489 ஓட்டுச்சாவடிகளில், 967 ஓட்டுச்சாவடி மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
மேலும், 262 பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 116 இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், 148 நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அனைத்து ஓட்டுச்சாவடி களிலும் குடிநீர் வசதி, சுகாதார வசதி மற்றும் மின் வசதி, வயதானோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு சாய்வு தளம் மற்றும், 888 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 சட்டசபை தொகுதிக்கு
உட்பட்ட ஓட்டுப்பதிவு மையங்களில், 1,300 உள்ளுர் போலீசார், 200 சிறப்பு போலீசார், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய, 3 மாநிலங்களில் இருந்து, 744 பாதுகாப்பு படையினர் மற்றும், 320 ஊர்காவல் படையினர், 200 முன்னாள் துணை ராணுவ படையினர், என மொத்தம், 2,744 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
மாவட்டம் முழுவதுமுள்ள ஓட்டுச்சாவடிகளில் நடக்கும், ஓட்டு பதிவுகளை, கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து
நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

