/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வனப்பகுதி குட்டைகளுக்கு தொடர் மழையால் நீர்வரத்து
/
வனப்பகுதி குட்டைகளுக்கு தொடர் மழையால் நீர்வரத்து
ADDED : செப் 01, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பரவ-லாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், வாச்சாத்தி, கொளகம்பட்டி உள்-ளிட்ட வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், மான், மயில் உள்ளிட்ட விலங்கு-களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகி உள்ளது.
இதனால், வனப்ப-குதியில் இருந்து விலங்குகள் வெளிவருவது தவிர்க்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர். அதே சமயம் தொடர்மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.