/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 27, 2024 04:15 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் இறந்துள்ளனர். இதையடுத்து, மா.கம்யூ., கட்சி சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன்பு கண்டன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
வட்ட செயலாளர் தனுஷன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் குமார், நிர்வாகிகள் தீர்த்தகிரி, வஞ்சி, மனோகரன், கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பேசினர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவிற்கு காரணமான அனைத்து போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். கள்ளச்சாராயம், போதை பழக்கத்தை முழுமையாக ஒழிக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
நிர்வாகிகள் சேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் கண்ணகி, அம்புரோஸ், கிளை செயலாளர்கள் பொன்னுசாமி, செல்வம், சங்க வட்ட செயலாளர் குப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.