/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூன் 14, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் திருமண மண்டபத்திலுள்ள காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 10ல் விநாயகர் வழிபாடு மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது.
11ல் இரண்டாம் கால யாகபூஜை, காமாட்சியம்மன் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் விழாவின் முக்கிய நிகழ்வான காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, அரூர் பள்ளிவாசல் மத நல்லிணக்கம் சார்பில், இஸ்லாமியர்கள், 2,000 தண்ணீர் பாட்டில்களை பக்தர்களுக்கு வழங்கினர்.