ADDED : ஜூன் 28, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, பாலக்கோடு பஸ் ஸ்டாப் முன், மா.கம்யூ., கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமான அனைத்து அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்கென சிறப்பு சட்டம் இயற்றி, தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதற்கு காரணமான, தமிழக அரசை கண்டித்தும், கோஷமிட்டனர்.