ADDED : ஆக 18, 2024 03:39 AM
தர்மபுரி: தர்மபுரியில், மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், செயற்குழு உறுப்பினர் தனுசன் தலைமையில் நடந்தது.
இதில், தர்மபுரி மாவட்டத்தில் வனத்தையொட்டியுள்ள விவசாயி-களுக்கு எதிராக, வனத்துறையினர் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். புறம்போக்கு நிலங்களில், 70 ஆண்டுக-ளுக்கு மேலாக குடியிருந்து, சாகுபடி செய்து வரும் பழங்குடி அல்லாதவருக்கு, நில பட்டா வழங்க வன உரிமைச்சட்டம் வழி-வகை செய்துள்ளது. பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்டஹள்ளி ஆகிய பகுதிகளில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நோக்கில், மரங்களை ஏலம் விடுவதற்கான முயற்சிகளை வனத்துறை தொடங்கியுள்ளது. காலம், காலமாக புறம்போக்கு நிலத்தில் சாகு-படி செய்து வரும் விவசாயிகளை வெளியேற்றும் வனத்துறையி-னரின் செயல்பாட்டை, இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
பென்னாகரம் அடுத்த ஏமனுாரில், மேட்டூர் அணை கட்டும்போது குடியமர்த்தப்பட்ட விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

