/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார்: வாசன்
/
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார்: வாசன்
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார்: வாசன்
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார்: வாசன்
ADDED : ஏப் 13, 2024 10:49 AM
தர்மபுரி: ''மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார்,'' என, தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், தர்மபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும், பா.ம.க., வேட்பாளர் சவுமியாவை ஆதரித்து, தொப்பூரில் த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது, தர்மபுரியில், 50 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் சவுமியா. பெண்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்பதில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைவருக்கும் வீடு, கழிப்பறைகள், குடிநீர் இணைப்பு விவசாயிகளுக்கு, 6,000 ரூபாய் ஊக்கத்தொகை, உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொடுத்து வருகிறது. எனவே, மீண்டும் மோடியின் கரங்களை வலுப்படுத்த சவுமியாவுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார்.
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியை தி.மு.க., நடத்தி வருகிறது. மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்க தவறிய, தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அ.தி.மு.க.,விற்கும் ஓட்டு போடக் கூடாது. இவ்வாறு பேசினார். பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தர்மபுரி பா.ம.க., எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

