/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புதிய டாஸ்மாக் கடை திறக்க நல்லாம்பட்டி மக்கள் எதிர்ப்பு
/
புதிய டாஸ்மாக் கடை திறக்க நல்லாம்பட்டி மக்கள் எதிர்ப்பு
புதிய டாஸ்மாக் கடை திறக்க நல்லாம்பட்டி மக்கள் எதிர்ப்பு
புதிய டாஸ்மாக் கடை திறக்க நல்லாம்பட்டி மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 05, 2024 06:37 PM
தர்மபுரி:பென்னாகரம் அருகே, புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, நல்லாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில், அவர்கள் கூறியுள்ளதாவது:
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நல்லாம்பட்டி, ஆதனுார் - மாங்கரை பிரிவு சாலையில், புதிய டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக தகவல் தெரிய வந்தது. ஆதனுாரில் கடந்தாண்டு டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுத்த போது, பொதுமக்களின் தொடர் ஆட்சேபனையால் அது கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுத்து வருவதால், அப்பகுதியிலுள்ள, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பாதிப்புகள் ஏற்படும். எனவே, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை, எங்கள் பகுதியில் திறப்பதை, அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.