/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குழாய் உடைப்பால் வீணாகும் ஒகேனக்கல் குடிநீர்
/
குழாய் உடைப்பால் வீணாகும் ஒகேனக்கல் குடிநீர்
ADDED : மே 18, 2024 12:58 AM
அரூர்: அரூர் அருகே, நான்குவழிச்சாலை பணி ஆமை வேகத்தில் நடப்பதுடன், குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒகேனக்கல் குடிநீர் வீணாகி வருகிறது.
முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், அரூர் வழியாக தர்மபுரி--தானிப்பாடி இடையே, 410 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை கடந்த, 2022 ஜூன், 19ல் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், தீர்த்தமலையில் இருந்து தானிப்பாடி வரை, நான்குவழிச்சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. மேலும், சாலை பணியின் போது, மேல்செங்கப்பாடி அருகே பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒகேனக்கல் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதனால் தீர்த்தமலை, வேடகட்டமடுவு, பையர்நாயக்கன்பட்டி, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, பெரியப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட சுற்று வட்டார பஞ்.,களில் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், நான்குவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

