/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சந்தனுார் பால முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்ட விழா
/
சந்தனுார் பால முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்ட விழா
சந்தனுார் பால முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்ட விழா
சந்தனுார் பால முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்ட விழா
ADDED : மார் 25, 2024 07:13 AM
தர்மபுரி : தர்மபுரி அடுத்த, சந்தனுார் பால முருகன் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று தேரோட்டம் நடந்தது.
தர்மபுரி, சந்தனுாரில் உள்ள பாலமுருகன் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி கடந்த, 22 ல் கொடியேற்று விழா நடந்தது. நேற்று முன்தினம், திரளான பக்தர்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், மொடக்கோரி, சந்தனுார், குளியனுார், தா.குளியனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் பால் குடம் எடுத்தனர். பின், ஊர்வலமாக கொண்டு வந்த பாலால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று இக்கோவிலில் உற்சவர் தேர் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இதேபோல், தர்மபுரி அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று மஹாரதம் இழுக்கும் தேர் திருவிழா நடந்தது. மேலும், நல்லம்பள்ளி அடுத்த லளிகம் சுப்பிரமணி சுவாமி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள முருகன் கோவில்களில் நேற்று, பங்குனி உத்திரத்தையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

