/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலையோர கடைகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு
/
சாலையோர கடைகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு
ADDED : மே 30, 2024 01:23 AM
தர்மபுரி, தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட, பாரதிபுரத்தில், நுகர்பொருள் வாணிப கிடங்கு பகுதியில், 66 அடி சாலை உள்ளது. இச்சாலையில், வாணிப கிடங்குக்கு பொருட்கள் இறக்கும் லாரிகள் இரவு, பகலாக சாலையை ஆக்கிரமித்து நீண்ட வரிசையில் நின்று வருவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், இச்சாலையோரத்தில் சிலர், மாலை மற்றும் இரவு நேரங்களில் சிற்றுண்டி மற்றும் சிறு கடைகள் வைத்து வந்தனர்.
தர்மபுரி நகராட்சி நிர்வாகம் நேற்று மாலை, 3:00 மணியளவில் அங்கிருந்த தள்ளு வண்டிகள் உள்ளிட்டவற்றை அகற்ற முயன்றனர். அப்போது, கடை நடத்துபவர்கள் மற்றும் பொதுமக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் அங்கிருந்து சென்றனர்.