/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் 4 மணி நேரம் கழித்து ஓட்டளித்த மக்கள்

ADDED : ஏப் 20, 2024 08:53 AM
பாலக்கோடு: தேர்தலை புறக்கணித்த பொதுமக்கள், சமரசம் செய்த அதிகாரிகளால்,- நான்கு மணி நேரம் கழித்து ஓட்டு போட வந்தனர்.
தர்மபுரி லோக்சபா தொகுதி, பாலக்கோடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளியில் பல ஆண்டுகளாக, ரயில்வே தரைபாலம் அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலை யில், கடந்த பிப்.,1- முதல் கோரிக்கை நிறைவேற்றும் வரை, தேர்தலை புறக்கணிப்பதாக, பொதுமக்கள் சார்பில் முடிவு செய்து அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது.
இது தொடர்பாக, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால், திட்டமிட்டப்படி ஒட்டுமொத்த கிராம மக்களும், நேற்று நடந்த லோக்சபா தேர்தல் ஓட்டுபதிவை புறக்கணித்தனர். இதனால், ஓட்டுசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதனை தொடர்ந்து, ஏ.ஆர்.ஓ., தனப்பிரியா பொதுமக்களிடம் பேசி கூடிய விரைவில், ரயில்வே தரை பாலம் அமைத்து கொடுப்பதாக உறுதியளித்து சமரசம் செய்தார்.
அதன் பிறகு ஓட்டுப்பதிவு, நான்கு மணி நேரத்திற்கு பின் தொடங்கியதால் மாலை, 6:00 மணிக்கு மேல் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டு போட அனுமதிப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.