/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விதிமுறை மீறி இயங்கும் கல்குவாரி நிரந்தரமாக மூட மக்கள் போராட்டம்
/
விதிமுறை மீறி இயங்கும் கல்குவாரி நிரந்தரமாக மூட மக்கள் போராட்டம்
விதிமுறை மீறி இயங்கும் கல்குவாரி நிரந்தரமாக மூட மக்கள் போராட்டம்
விதிமுறை மீறி இயங்கும் கல்குவாரி நிரந்தரமாக மூட மக்கள் போராட்டம்
ADDED : ஆக 11, 2024 03:20 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த மடதஹள்ளி பகுதியில் உள்ள நரசிம்ம பெருமாள் மலையில், அரசின் கல்குவாரி உள்-ளது. இதன் அருகில் சிவனஹள்ளி, நொச்சிக்குட்டை, சி.பள்ளிப்-பட்டி, மடதஹள்ளி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் விவசா-யத்தை நம்பி வாழ்கின்றனர். கல்குவாரியால் பாதிக்கப்பட்டு வந்-தனர். இதுகுறித்து அளித்த புகார்படி, பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கோவிந்தசாமி கல்குவாரியை ஆய்வு செய்தார்.
அப்போது மக்கள் கூறுகை யில்,'கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் கல்குவாரியில், இரவு பகலாக தொடர்ந்து வெடி சத்தத்தாலும், சுற்றுச்சூழல் பாதிப்பாலும் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். வீடுகளில் விரிசல் விடுகி-றது. விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்குவாரியை நட த்தி வரும் நபருக்கு மாவட்ட நிர்வாகம், கனிம வளத்துறை, போலீசார் என அனைவரும் உறுதுணையாக இருக்கின்றனர். கல்-குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்' என்றனர்.
எம்.எல்.ஏ., கோவிந்தசாமி கூறுகையில்,''இது குறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களோடு சேர்ந்து கல்குவாரியை மூட வலியுறுத்தி போராட தயாராக உள்ளேன்,'' என்றார்.பின் அங்கு வந்த குவாரியை நடத்தும் ரத்னவேலுவின் காரை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி, கடத்துார் போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்-தையில் ஈடுபட்டனர். அப்போது, குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும். இல்லையென்றால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ஒப்படைத்-துவிட்டு ஊரை காலி செய்து செல் வோம்' என மக்கள் கூறினர். இது குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்-வதாக தாசில்தார் வள்ளி கூறினார்

