ADDED : ஆக 18, 2024 03:41 AM
தர்மபுரி: தமிழக அரசு வழங்கும் அடிப்படை வசதிகள் கேட்டு, பாப்பாரப்-பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா காலனி மக்கள், தர்மபுரி சப் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, 12வது வார்டு தியாகி சுப்பிரமணிய சிவா காலனியில், ஏராளமான மக்கள் வசிக்கின்-றனர். கடந்த ஓராண்டாக இப்பகுதியில் புதிய வீடு கட்டுபவர்க-ளுக்கு, மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்டவை வழங்க மறுக்கப்-படுகிறது. அதிகாரிகளிடம் கேட்டபோது, நீங்கள் வசிக்குமிடம் ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான இடம் என தெரிவிக்-கின்றனர். 60 ஆண்டுகளுக்கு முன் அரசு வழங்கிய வீட்டுமனை பட்டாவை, தற்போது அறநிலைதுறைக்கு சொந்தமானதாக தெரி-விக்கின்றனர். இந்நிலையில், தமிழக அரசு வழங்கும் வீடு கேட்டு விண்ணப்பம் செய்திருந்தோம். ஆனால், அவர்களும், அந்த இடம் அறநிலை-யத்துறைக்கு சொந்தமான இடம் எனக்கூறி, வீடு வழங்க நிராக-ரித்து விட்டனர். வீடு இல்லாமல், பழைய ஓட்டு வீடுகளில், 2, 3 குடும்பங்கள் ஒன்றிணைந்து வசிக்கிறோம். எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை, பேரூராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. எனவே, 1964ல், சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரம-ணிய சிவா பெயரால் உருவாக்கப்பட்ட எங்கள் காலனிக்கு, போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.