/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் வழங்ககோரி மறியல் போராட்டம்
/
குடிநீர் வழங்ககோரி மறியல் போராட்டம்
ADDED : நவ 09, 2024 03:51 AM
அரூர்: அரூர் அடுத்த பொன்னேரி பஞ்.,க்கு உட்பட்ட ஈட்டியம்பட்டியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் வழங்கப்படுகிறது.
பத்து நாட்களுக்கு மேலாக போதிய அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பஞ்., நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, ஆத்திரமடைந்த கிராமமக்கள் அரூர்-தீர்த்தமலை சாலையில், ஈட்டியம்பட்டி பஸ் நிறுத்தத்தில், நேற்று காலை, 9:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பஞ்., தலைவர் அழகுராமன் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்குவதுடன், பழுதடைந்த தெருவிளக்குகளை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.