/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சூறைக்காற்றில் உடைந்த மின் கம்பங்கள்;ஒரு வாரமாக இருளில் மூழ்கிய கிராமங்கள்
/
சூறைக்காற்றில் உடைந்த மின் கம்பங்கள்;ஒரு வாரமாக இருளில் மூழ்கிய கிராமங்கள்
சூறைக்காற்றில் உடைந்த மின் கம்பங்கள்;ஒரு வாரமாக இருளில் மூழ்கிய கிராமங்கள்
சூறைக்காற்றில் உடைந்த மின் கம்பங்கள்;ஒரு வாரமாக இருளில் மூழ்கிய கிராமங்கள்
ADDED : மே 10, 2024 02:44 AM
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில் கடந்த சில தினங்களுக்கு முன் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் பொ.மல்லாபும் பேரூராட்சி, திப்பிரெட்டிஹள்ளி, பத்திரெட்டிஹள்ளி, சுரைக்காய் பட்டி கொண்டகரஹள்ளி, வத்தல்மலை, ரேகடஹள்ளி, அண்ணா நகர், ஜாலியூர், நத்தமேடு, மோட்டாங்குறிச்சி, கோட்டூர், பச்சேலிபுதுார் உள்ளிட்ட பகுதியில், 100க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து மின்தடை ஏற்பட்டது.ஆட்கள் பற்றாக்குறையால் மின் பாதை சரிசெய்யும் பணி ஆமை வேகத்தில் நடந்து வந்தது. கடந்த, 3 முதல் தற்போது வரை பல கிராமங்கள் ஒரு வாரமாக இருளில் மூழ்கி, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சில கிராமங்களில் மக்களிடம், உடைந்த மின் கம்பங்களுக்கு பதிலாக, புதிதாக மின் கம்பங்கள் அமைக்க, பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, கடத்துார் மின் கோட்ட செயற்பொறியாளர் செந்தில்வேலிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: பொம்மிடி சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையில், 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. அங்கு புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. 7 குழுக்களாக மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்கு மின் சப்ளை வழங்கப்பட்டு விட்டது. ஒரு சில இடங்களில் பணி நடக்கிறது. இன்று அல்லது நாளை குடியிருப்பு, விவசாய கிணறுகளுக்கும் முழுமையாக மின் வினியோகம் வழங்கப்பட்டு விடும். உடைந்த மின் கம்பங்களுக்கு யாரிடமும் பணம் பெறவில்லை. அரசே, புதிய மின் கம்பங்கள் அமைத்து கொடுக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.