/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காங்., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் ஓட்டு கேட்பு
/
காங்., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் ஓட்டு கேட்பு
காங்., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் ஓட்டு கேட்பு
காங்., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் ஓட்டு கேட்பு
ADDED : ஏப் 13, 2024 07:44 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட பேரிகை பகுதியில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம், காங்., வேட்பாளர் கோபிநாத்திற்கு, கை சின்னத்தில் ஆதரவு கேட்டு, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சாலையோர வியாபாரிகளின் கடைகளுக்கே சென்று, அவர்களிடம் தமிழக அரசின் திட்டங்களை எடுத்து கூறினார். அப்போது, இண்டியா கூட்டணி வேட்பாளர் கோபிநாத் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைந்தால், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியும் என மக்களிடம் தெரிவித்தார். பேரிகை ஒன்றிய செயலாளர் நாகேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகிரி பஸ் ஸ்டாண்ட், மராட்டி தெரு, ஜாமியா மஸ்ஜித் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். மேலும், வணிக வளாகங்கள், கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார்.
அவருடன், ஓசூர் சட்டசபை தொகுதி பார்வையாளர் வேலுார் ரமேஷ், மாநகர துணை செயலாளர் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுமன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கலைச்செழியன் மற்றும் நிர்வாகிகள் மனோகர், சீனிவாசன், ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

