/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரயத்துவாரி பட்டா ரத்து செய்வதை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
/
ரயத்துவாரி பட்டா ரத்து செய்வதை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
ரயத்துவாரி பட்டா ரத்து செய்வதை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
ரயத்துவாரி பட்டா ரத்து செய்வதை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 09, 2024 02:52 AM
கரூர்: கரூரில், கோவில் நில பிரச்னை மற்றும் இனாம் ஒழிப்பு சட்-டத்தின் வாயிலாக பெற்ற, ரயத்துவாரி பட்டாக்களை ரத்து செய்-வதை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
கரூர், வெண்ணைமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலிலை சுற்றி, 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்-ளன. அந்த குடியிருப்புகள் அனைத்தும், கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என நீதிமன்றம் உத்தரவின் பேரில், ஹிந்துசமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கடைகளை அடைத்து போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கரூர் கலெக்டர் அலுவலகம் அருகில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், விவசாயிகள் பாதுகாப்பு சங்க இனாம் நில விவசாயிகள், மனை உரிமையாளர்கள் இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இனாம் ஒழிப்பு சட்டத்தின் வாயிலாக பெற்ற ரயத்துவாரி பட்டாக்களை, டி.ஆர்.ஓ., ரத்து செய்ததை உடனே நிறுத்த வேண்டும் என
வலியுறுத்தினர்.
கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வட்டார போக்குவரத்து அலுவ-லகம் முன்புறம் கூடியிருந்த ஆண்கள், பெண்கள் என, 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, 50க்கும் மேற்பட்ட போலீசார், அவர்-களை தடுத்து நிறுத்தினர்.
பின், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகம் அழைத்து சென்று அதிகாரிகளை சந்திக்க வைத்தனர். அதில், அமைதி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்-படும் என தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இப்-போராட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.