/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 20, 2024 02:46 AM
தர்மபுரி: கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய பட்டதாரி பொறியாளர் மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் சங்கம் சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ரமண்ணா தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், பணியிட மாறுதல், பி.எஸ்.என்.எல்., கார்பரேட் அலுவலக விதிமுறைகள் தொடர்ந்து, பின்பற்றாமல் விதிகள் மீறப்பட்டு மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்காமல், ஒருதலை பட்சமாக வெளியிடப்பட்ட பணியிட மாறுதல் ஆணையை திரும்ப பெற வேண்டும். ஓசூரிலுள்ள தொலைபேசி நிலையங்களில், 400க்கும் அதிகமான மரங்களை வெட்டிய மற்றும் திருடியவர்கள் மீது, வழக்குப்பதிய வேண்டும்.மேலும், பி.எஸ்.என்.எல்., சொத்துக்களை பாதுகாக்க தேவையான அனைத்து முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். செயல்திறன் என்ற பெயரில், பெண் அதிகாரிகளை தொடர்ந்து, ஒருதலை பட்சமாக பழி வாங்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

