/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பயிற்சி டாக்டர் கொலையை கண்டித்து தர்மபுரியில் பேரணி, ஆர்ப்பாட்டம்
/
பயிற்சி டாக்டர் கொலையை கண்டித்து தர்மபுரியில் பேரணி, ஆர்ப்பாட்டம்
பயிற்சி டாக்டர் கொலையை கண்டித்து தர்மபுரியில் பேரணி, ஆர்ப்பாட்டம்
பயிற்சி டாக்டர் கொலையை கண்டித்து தர்மபுரியில் பேரணி, ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 18, 2024 03:42 AM
தர்மபுரி: கொல்கத்தாவில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து, தர்ம-புரியில் நேற்று இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம், பல் மருத்துவர்கள் சங்கம் இணைந்து, கண்-டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
. இதில், இந்-திய மருத்துவ சங்க மாநில துணைத்தலைவர் மற்றும் தமிழக அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் சந்திரசேகர், தலைமை வகித்தார்.இதில், மத்திய அரசு நடுநிலையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். மருத்துவ கல்லுா-ரியை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய வேண்டும். மத்திய சுகாதார பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மருத்துவ-மனைகளின் எல்லா இடங்களிலும், 'சிசிடிவி' கேமரா அமைக்க வேண்டும். மருத்துவக் கல்லுாரிகளில் போதிய பாதுகாப்பாளர்-களை நியமிக்க வேண்டும். பெண் மருத்துவர்கள் இரவு நேரங்-களில் பணி செய்யும் போது, கூடுதல் மருத்துவர்கள் நியமித்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டனர். இதில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும், நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக, அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனையில், அவசர பிரிவுகளை தவிர பொதுப்பிரி-வுகளில், நேற்று காலை முதல் இன்று காலை வரை, 24 மணி நேரம் மருத்துவ சேவை நடக்காது. இதற்கு பொதுமக்கள் ஒத்து-ழைக்க மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.