/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவில்களில் ராமநவமி சிறப்பு பூஜை
/
கோவில்களில் ராமநவமி சிறப்பு பூஜை
ADDED : ஏப் 18, 2024 01:34 AM
தர்மபுரி, ராமநவமியையொட்டி, தர்மபுரி அடுத்த கீழ்தெருவிலுள்ள சீதாராம தாஸ ஆஞ்சநேய சுவாமி கோவிலில், காலை சுப்ரபாதம், நிர்மாலய
அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வேதபாராயணம், விஷ்ணு சஹஸ்ரநாமம், அபிஷேகம் மற்றும்
அலங்காரம் நடந்தது.
பின், லட்சார்ச்சனை, மஹாதீபாராதனை, ரத சேவா நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆன்மிக செற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தது. பின், அருகிலுள்ள திருமண மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல், தர்மபுரி அடுத்த அக்ராஹரத்தெருவில் உள்ள ராகவேந்திர சுவாமி கோவிலில், ராமர் மற்றும் சீதாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. இதேபோல், மாவட்டத்திலுள்ள பல்வேறு ராமர் கோவில்களில், ராமநவமியையொட்டி சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

