/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
தர்மபுரியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 11, 2024 11:35 AM
தர்மபுரி: தர்மபுரியில், தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில், டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
இதில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். சரியான எடையில், தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். சேதமாகும் ரேஷன் பொருட்களுக்கு, ஊழியர்கள் பெறுப்பேற்க வலியுறுத்தலை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகிகள் கருணாகரன், லட்சுமிபதி, ஹரிதாஸ், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் கண்டன உரையாற்றினார். 50க்கும் மேற்பட்ட அரசு ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்றனர்.
விபத்தில் டிரைவர் பலி
கிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டை அடுத்த, நரசம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கார்த்திக், 46, ஆட்டோ டிரைவர். கடந்த, 8 இரவு இவர் ஊத்தங்கரை-சிங்காரப்பேட்டை சாலை நரசம்பட்டி கூட்டு ரோடு அருகில், ஆட்டோவில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ், ஆட்டோ மீது மோதியதில் கார்த்திக் இறந்தார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.