/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெயிலில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுகோள்
/
வெயிலில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுகோள்
வெயிலில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுகோள்
வெயிலில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுகோள்
ADDED : ஏப் 25, 2024 04:49 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டின், வட உள் மாவட்டங்களான வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என அறிவித்துள்ளது.
அதன்படி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள மக்கள் பகல், 12 மணி முதல் மாலை, 3:00 மணி வரை தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் போதுமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்ப தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏதேனும் ஏற்படும் நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். வெளியே செல்ல அவசியம் ஏற்பட்டால், குடையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

