/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சம்பா பருவத்துக்கு நெல் ரகம் விதை பரிசோதனை அவசியம்
/
சம்பா பருவத்துக்கு நெல் ரகம் விதை பரிசோதனை அவசியம்
சம்பா பருவத்துக்கு நெல் ரகம் விதை பரிசோதனை அவசியம்
சம்பா பருவத்துக்கு நெல் ரகம் விதை பரிசோதனை அவசியம்
ADDED : ஆக 17, 2024 04:06 AM
தர்மபுரி: சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களும், விதை பரிசோதனையும் அவசியம் என, தர்மபுரி விதை பரிசோதனை அலுவலர் கிரிஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில், நெல் சாகுபடியில் சம்பா பருவம் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பருவம் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்குகிறது. இதில், தர்மபுரி மாவட்டத்துக்கு ஏற்ற நீண்ட கால ரகங்களான மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, கோ - 55 மற்றும், 52 ஆகிய ரகங்களின் தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பது அவசியம். பருவத்துக்கு ஏற்ற நெல் பயிரில், முறையான ரகங்களை தேர்வு செய்து விதைப்பது மிகவும் அவசியமாகும். மேலும், விதைக்கும் முன் தரமான விதைகளை வாங்கி அதிக முளைப்புத்திறன் கொண்ட விதைகளை, விதை பரிசோதனை செய்து விதைக்க வேண்டும்.
இவ்வாறு விதை பரிசோதனை செய்வதால், வயலில் தகுந்த பயிர் எண்ணிக்கை அதிகரித்து உயர் விளைச்சளை பெறலாம். நெல் விதைகள், 80 சதவீதம், முளைப்புத் திறனும், 98 சதவீதம் புறத்துாய்மையும் கட்டாயம் இருக்க வேண்டும்.
எனவே, தர்மபுரி மாவட்டத்திலுள்ள விதை நெல் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் பின் புறமுள்ள விதை பரிசோதனை நிலையத்தில், 100 கிராம் அளவுள்ள நெல் விதையை, 80 ரூபாய் கட்டணம் செலுத்தி விதையை பரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.