/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின் கம்பத்தின் மீது சாலை அமைப்பு
/
மின் கம்பத்தின் மீது சாலை அமைப்பு
ADDED : மார் 30, 2024 03:28 AM
தர்மபுரி: சாலையோரம் இருந்த மின் கம்பத்தில், சிமென்ட் சாலை அமைத்த நகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தர்மபுரி நகராட்சியில் மொத்தம், 33 வார்டுகள் உள்ளன. ஒரு சில வார்டுகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருந்தன. இவற்றில் பல வார்டுகளில் சிமென்ட் சாலை சேதமான நிலையில் இருந்தது. இவற்றை நகராட்சி நிர்வாகம் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட, 7 வது வார்டு குப்பாகண்டர் தெருவில், தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மின்சார வாரியம் சார்பில், அந்த சாலையில் ஒரு மின்கம்பம் வைக்கப்பட்டிருந்தது. அதை கண்டுகொள்ளாமல், சாலை அமைத்த பணியாளர்கள், அதை ஒட்டியே சாலை அமைத்து விட்டுச் சென்றனர்.
மின் கம்பத்தை அப்புறப்படுத்தாமல், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில், அந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

