/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.7.84 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.7.84 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 04, 2024 05:00 AM
கிருஷ்ணகிரி: பர்கூ அருகே நேற்று தீர்த்தகிரிபட்டியில் பர்கூர் - மத்துார் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கலையரசி தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே ஸ்கூட்டரில் வந்த பெண், 91,480 ரூபாய் உரிய ஆவணமின்றி கொண்டு வந்திருந்தார். அவர் பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டியை சேர்ந்த பாமா, 42 என்பதும், மகளிர் சுய உதவிக்குழு கடன் சங்க முகவராக உள்ளதும் தெரிந்தது. அப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பர்கூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் தாசில்தார் திருமுருகனிடம் ஒப்படைத்தனர்.
* தளி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், அந்தேவனப்பள்ளி, ஜவளகிரி வனத்துறை சோதனைச்சாவடி, பைரமங்கலம் கூட்ரோடு ஆகிய மூன்று இடங்களில் வாகன சோதனை நடத்தினர். இதில், 3 பேர் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற, 2,03,550 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஓசூர் சட்டசபை தொகுதி பறக்கும் படையினர், முகலப்பள்ளி பகுதியில் நடத்திய வாகன சோதனையில், 2.36 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, ஓசூர் சப்கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி பறக்கும் படையினர், வேப்பனஹள்ளி சோதனைச்சாவடி மற்றும் சூளகிரி எச்.பி., பெட்ரோல் பங்க், துரை ஏரி அருகே நடத்திய வாகன சோதனையில், 3 பேர் கொண்டு சென்ற, 2,54,030 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, சூளகிரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

