/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வண்டல் மண் எடுப்பதில் விதிமீறல் புகார் தெரிவிக்க ஆர்.டி.ஓ., அழைப்பு
/
வண்டல் மண் எடுப்பதில் விதிமீறல் புகார் தெரிவிக்க ஆர்.டி.ஓ., அழைப்பு
வண்டல் மண் எடுப்பதில் விதிமீறல் புகார் தெரிவிக்க ஆர்.டி.ஓ., அழைப்பு
வண்டல் மண் எடுப்பதில் விதிமீறல் புகார் தெரிவிக்க ஆர்.டி.ஓ., அழைப்பு
ADDED : ஆக 09, 2024 03:11 AM
அரூர்: வண்டல் மற்றும் களிமண் எடுத்துச் செல்வதில் விதிமீறல்கள் இருந்தால், அது குறித்து புகார் தெரிவிக்கலாம் என, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை:
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்-பாட்டிலுள்ள நீர்நிலைகளில் வண்டல் மண், களிமண் ஆகிய-வற்றை, தாசில்தாரின் அனுமதி ஆணையை, ஆன்லைனில் பெற்று இலவசமாக எடுத்துச் செல்ல தமிழக அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, அரூர் மற்றும் பாப்-பிரெட்டிப்பட்டி தாலுகாவில், வண்டல் மண், களிமண் ஆகிய-வற்றை எடுத்துச் செல்ல, தர்மபுரி கலெக்டர் அனுமதி அளித்-துள்ளார்.
நீர்நிலைகளின் பொறுப்பாளர்களாக கலெக்டரால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊராட்சி செயலர்கள் மற்றும் நீர்வள ஆதாரத்-துறை உதவி பொறியாளர்கள், தாசில்தாரின் ஆணை கிடைத்த-வுடன், அதிலுள்ள விண்ணப்பதாரரின் படத்தின் அடையா-ளத்தை சரிபார்த்து, வண்டல் மண், களிமண் எடுக்கப்பட்டுள்ள அளவு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வண்டல் மண், களிமண் அகற்றப்படும் இடம், கரையின் அடிமட்டத்திலி-ருந்து கரையின் உயரத்தை போல் குறைந்தது, 2 மடங்கு தூரத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆழம் ஒரு மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். களிமண், வண்டல் மண் காலை, 7:00 முதல், மாலை, 6:00 மணி வரை மட்டுமே அகற்றப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது, உரிய சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் தொடரப்படும். விதி மீறல்கள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள், 94454 61802 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கும் செய்திகள், புகைப்ப-டங்கள் அனுப்பலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.