/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உபவடி நீர் பகுதி மாதிரி கிராமம் தேர்வு
/
உபவடி நீர் பகுதி மாதிரி கிராமம் தேர்வு
ADDED : ஆக 11, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, மோளை-யானுார் கிராமம் வாணியாறு உபவடி நீர் பகுதி மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதில், கிராமப்புற மதிப்பீடு, நீர் பட்ஜெட் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்-பட்டது. வேளாண் துணை இயக்குனர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசு, வேளாண் பொறியாளர் கிருபா, நீர் பாசன தலைவர் குமரேசன், மோளையானுார் பஞ்., தலைவர் துரை பாண்டியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

