/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை மீட்க கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த கையெழுத்து

ADDED : ஜூன் 10, 2024 01:37 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் ஒன்றியம், பெரியாம்பட்டி பஞ்., மண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலை சுற்றியுள்ள இடங்கள் கோவிலுக்கு சொந்தமானது.
ஹிந்து சமய அறநிலையத்துறை வசமுள்ள இக்கோவிலில் நீண்ட காலத்திற்கு முன், அப்பகுதியில், 7 கிராம பொதுமக்கள் சார்பில், பண்டிகை நடத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் சுற்றியுள்ள பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் கட்டப்பட்டன. அந்த இடம் அவ்வப்போது கை மாறி பலர் அனுபவித்து வருகின்றனர். ஆனால், கோவிலில் எந்த வளர்ச்சியும் இல்லாமல், பாழடைந்து வருகிறது. இதனால் கோவில் நிலம் மீட்பது தொடர்பாக, பெரியாம்பட்டியை சேர்ந்த சென்னியப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், 4 மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம்
உத்தரவிட்டது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலைய துறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி, 7 கிராம பொதுமக்கள் சார்பில் கையெழுத்து பெறும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதில், முன்னாள் பஞ்., தலைவர் பாண்டுரங்கன், ஊர் பிரமுகர் ராமச்சந்திரன், சந்திரசேகர் மற்றும் பலர் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.