/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்
/
சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்
ADDED : செப் 15, 2024 01:06 AM
சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்
தர்மபுரி, செப்.15-
மா.கம்யூ., கட்சியின், அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி மறைவிற்கு, தர்மபுரியில் இரங்கல் கூட்டம், ஊர்வலம் நடந்தது. தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த இரங்கல் கூட்டத்துக்கு, மா.கம்யூ., மாவட்ட செயலர் குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் டில்லிபாபு, சிசுபாலன், கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன்தீட்சண்யா, காங்., மாவட்ட தலைவர் தீர்த்தராமன், தி.மு.க., நகர செயலர் நாட்டான்மாது, இ.கம்யூ., கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் தேவராசன் உள்பட பலர் பங்கேற்றனர். பின், அனைவரும் இரங்கல் உரை நிகழ்த்தினர், முன்னதாக, செங்கொடிபுரத்தில் துவங்கிய இரங்கல் கூட்ட ஊர்வலம் ராஜகோபால் பூங்கா வழியாக சென்று, பிறகு அதே இடத்துக்கு வந்தடைந்தது.