/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தாயை அடித்து கொன்ற மகன் போலீஸ் ஸ்டேஷனில் சரண்
/
தாயை அடித்து கொன்ற மகன் போலீஸ் ஸ்டேஷனில் சரண்
ADDED : ஆக 09, 2024 03:12 AM
ஓசூர்: ஓசூர் அருகே, பணம் கேட்டு கொடுக்காததால் தாயை அடித்து கொன்ற மகன், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே லிங்காபுரத்தை சேர்ந்-தவர் ஸ்ரீநாத், 44, கட்டட மேஸ்திரி; இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு, 2 பெண் குழந்தைகள். கடந்த, 15 ஆண்டுக்கு முன் குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்த மஞ்சுளா, குழந்தை-களையும் தன்னுடன் அழைத்து சென்றார். ஸ்ரீநாத்தின் அண்ணன், 25 ஆண்டுக்கு முன்பே பெங்களூருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். இதனால், 75 வயதான தன் தாய் பைரம்மாவுடன் ஸ்ரீநாத் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர், குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தாயிடம் தகராறு செய்து வந்தார். நேற்றிரவு, 7:00 மணிக்கு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீநாத், தாய் பைரம்மாவிடம் மேலும் குடிக்க பணம் கேட்டு தக-ராறு செய்தார். பணம் இல்லை எனக்கூறிய தாயை ஆத்திரத்தில், அங்கிருந்த கட்டையால் தலையில் அடித்து கொன்றார். பின் பாகலுார் போலீஸ் ஸ்டேஷன் சென்று, நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். பைரம்மா சடலத்தை மீட்ட போலீசார், ஸ்ரீநாத்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.